உயர்தர சர்வதேச பல்கலைக்கழகங்களில் அரசாங்க புலமைப்பரிசில் – 2025 A/L சாதனையாளர்களுக்கான சிறப்பு வாய்ப்பு
அரசாங்கத்தின் "வளமான தேசம் – அழகான வாழ்க்கை" கொள்கைக்கமைவாக, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தனது வெளிநாட்டு புலமைப்பரிசில் திட்டத்தை இரண்டாவது ஆண்டாக வழங்குகிறது.
இந்தத் திட்டம், 200 சிறந்த G.C.E. (A/L) மாணவர்களுக்கு உலகின் முன்னணி சர்வதேச பல்கலைக்கழகங்களில் இளங்கலைப் பட்டப்படிப்பைத் தொடர வாய்ப்பளிக்கிறது.
"நாகரீகமான குடிமகன் - மேம்பட்ட மனித வளம்" என்ற நோக்கத்தின் கீழ், 2026/2027 கல்வியாண்டிற்காக 25 முதல் 50 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கப்படும். 2029 வரை மொத்தம் 200 புலமைப்பரிசில்களை வழங்கும் நோக்கத்துடன் ஆண்டுதோறும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
விண்ணப்பங்கள் கோரல்
2025 A/L பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
அனைத்து பாடப்பிரிவுகளிலும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆனால் உலகளவில் வளர்ந்து வரும் துறைகள் அல்லது இலங்கையில் தற்போது வழங்கப்படாத துறைகளில் கற்க விரும்புவோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யும் பல்கலைக்கழகம் QS, THE, ARWU சர்வதேச தரவரிசைகளில் முதல் 500 இடங்களுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
1. உங்கள் விருப்பமான பாடப்பிரிவைத் தேர்வு செய்யவும் (2026/2027 ஆரம்பம்).
2. சர்வதேச தரவரிசையில் Top 500 உள்ள பல்கலைக்கழகத்தைத் தேர்வு செய்யவும்.
3. அமைச்சின் இணையதளத்தில் கணக்கு உருவாக்கவும் Click Here
4. விண்ணப்பத்தை துல்லியமாக பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைக்கவும்.
5. ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தபால் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.
6. இறுதி நாள்: 11 May 2026
7. தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்படுவர்.
8. தெரிவுக்குப் பிறகு, வெளிநாட்டு பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பித்து Placement Letter பெற வேண்டும்.
9. அனுமதி கடிதத்தை சமர்ப்பித்து அமைச்சுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின் நிதி வழங்கப்படும்.
10. படிப்பை முடித்த பின் இலங்கைக்கு திரும்பி சேவை செய்ய வேண்டும்.
பொதுத் தகுதிகள்
இலங்கை பிரஜை ஆக இருக்க வேண்டும். விண்ணப்ப இறுதி நாளில் குறைந்தது 18 வயது இருக்க வேண்டும்.
2025 A/L Common General Paper இல் குறைந்தது 30% பெற வேண்டும். General English இல் குறைந்தது "C" சித்தி அல்லது அதற்கு இணையான தகுதி இருக்க வேண்டும். நல்ல உடல்நலம் அவசியம்.
புலமைப்பரிசில் நன்மைகள்
கல்விக் கட்டணங்கள் மற்றும் இதர கட்டணங்கள். உணவு மற்றும் தங்குமிடத்திற்கான மாதாந்திர கொடுப்பனவு. சுகாதார காப்பீடு மற்றும் Economic Class விமான கட்டணம். விசா கட்டணம், குடியேற்ற செலவுகள் மற்றும் IELTS/TOEFL கட்டணங்கள் (தகுதியின் அடிப்படையில்).
ஒரு மாணவருக்கான ஆண்டு செலவு அதிகபட்சம் ரூ. 20,000,000 வரை வழங்கப்படும்.
விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்
இளங்கலை (Bachelor’s) படிப்பிற்கு மட்டுமே நிதி வழங்கப்படும். படிப்பை முடித்த பின் இலங்கைக்கு திரும்புதல் கட்டாயம். தேர்ந்தெடுக்கப்படும் பல்கலைக்கழகம் UGC அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். இந்தப் புலமைப்பரிசிலைப் பெறுவோர் UGC வழியாக உள்ளூர் பல்கலைக்கழக சேர்க்கைக்கு தகுதியற்றவர்களாக கருதப்படுவர். தவறான தகவல் வழங்கப்பட்டால் புலமைப்பரிசில் ரத்து செய்யப்பட்டு நிதி மீட்கப்படும்.
வளர்ந்து வரும் துறைகள் (Emerging Fields)
1. ICT மற்றும் Computer Science Cybersecurity, Data Science, AI, Cloud Computing, Web/Mobile Development
2. Engineering மற்றும் Technology Robotics, IoT, Marine Engineering, Aerospace Engineering, Renewable Energy, Civil, Electrical, Mechanical
3. Business மற்றும் Finance International Business, Supply Chain, Business Analytics, FinTech
4. Health மற்றும் Life Sciences Biomedical Science, Biotechnology, Health Informatics
5. Agriculture மற்றும் Environment Smart Farming, Food Technology, Environmental Science
6. Creative Industries Animation, Game Design, Digital Marketing
7. Law மற்றும் International Relations International Law, Public Policy
8. Education Special Needs Education, Educational Technology
9. Physical Sciences Physics, Chemistry, Mathematics
10. Humanities Psychology, Journalism
11. Economics Digital Economy, Development Economics
தொழில்நுட்ப உதவி: 0112687637
திட்ட விளக்கம்:
011-2698994 (Sinhala/English)
011-4849135 (Tamil/English)
